தி.மலை | தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதாக அண்ணன் தம்பி கைது – 7 பைக்குகள் பறிமுதல்
செய்தியாளர்: புருஷோத்தமன்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இதன் மீது காவல்துறை உரிய கவனம் செலுத்தவில்லை என பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில், நகரில் உள்ள சிசிடிவி காட்சியின் அடிப்படையில் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
இதன் பேரில் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ராமன் லட்சுமணன் ஆகிய சகோதரர்கள் இருவரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், இருசக்கர வாகனங்கள் திருடியதை ஒப்புக்கொண்டு விசாரணை அடிப்படையில் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து செய்யாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்
இதையடுத்து செய்யாறு போலீசார், இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து வந்தவாசி குற்றப் பிரிவு நீதிபதி முன் ஆயப்படுத்தி இருவரையும் வேலூர் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.