திருவண்ணாமலை டூ கோலார்.. சிக்காமல் தப்பிக்க கொள்ளையர்கள் பயன்படுத்திய நூதன டெக்னிக்!

திருவண்ணாமலை டூ கோலார்.. சிக்காமல் தப்பிக்க கொள்ளையர்கள் பயன்படுத்திய நூதன டெக்னிக்!
திருவண்ணாமலை டூ கோலார்.. சிக்காமல் தப்பிக்க கொள்ளையர்கள் பயன்படுத்திய நூதன டெக்னிக்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் நான்கு ஏடிஎம்களை உடைத்து 75 லட்ச ரூபாய் கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கொள்ளை அடித்தது முதல் இன்று அவர்களை பிடித்து சிறையில் அடைத்தது வரை நடந்த செய்தி தொகுப்பு.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது 12ஆம் தேதி காலை ஒரு மணி அளவில் திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலையில் இரண்டு இடங்களிலும் போளூரில் ஒரு இடத்திலும் கலசபாக்கத்தில் ஒரு இடத்திலும் என நான்கு ஏடிஎம்களில் 75 லட்ச ரூபாய் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த நிகழ்வு தமிழகத்திலேயே பெரும் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு நிகழ்வாக காணப்பட்டது.

இந்த கொள்ளை நடந்ததை அடுத்து வடக்கு மண்டல ஐஜி கண்ணன் வேலூர் சரக டிஐஜி முத்துசாமி வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஒன்பது தனிப்படைகள் அமைக்கப்பட்டு கர்நாடகா, அரியானா ,குஜராத் என மூன்று மாநிலங்களில் இந்த தனிப்படையில் சென்று விசாரணைகளை மேற்கொண்டது.

இந்த ஒன்பது தனிப்படைகளும் கொள்ளை அடிக்கப்பட்ட ஏடிஎம்களில் அந்த இரவு 1 மணிக்கு இருந்த செல்போன் எண்கள் எந்தெந்த வழியாக பயணித்து தற்போது எங்கு உள்ளது என்று அந்த செல்போன் எண்களின் பயணத்தினை கொண்டு அவர்களின் இருப்பிடத்தை கண்டறிந்தனர் அந்த மாநிலங்களுக்கு சென்று அவர்கள் இருப்பிடத்தில் அந்த மாநில போலீசார் உதவியுடன் 10 பேரை சுற்றி வளைத்து விசாரணை செய்தனர் .

அதில் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஆரிப் என்பவன்தான் இந்த கொள்ளை கூட்டத்தின் தலைவன் என்று கருதப்பட்டு அவனையும் அவனுடைய கூட்டாளி ஆசாத் என்பவனையும் கைது செய்தனர்.

கொள்ளையர்கள் தப்பிய பயன்படுத்திய டெக்னிக்!

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையர்கள் கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு கொள்ளையடித்த பணத்துடன் சென்றபோது அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகள் வெளியாகியுள்ளது.

கொள்ளையை அரங்கேற்றிய அரியானா பகுதியைச் சேர்ந்த கும்பல் கர்நாடக மாநிலம் கேஜிஎப் பகுதியில் தனியார் விடுதியில் மேல் மாடியில் கொள்ளை கும்பல் உரிமையாளருக்கு தெரியாமல் அங்குள்ள ஊழியர்கள் உதவியுடன் தங்கி இருந்து ஹாரிப் ஜாவித் உதவியுடன் திருவண்ணாமலையில் கொள்ளையடித்து விட்டு மீண்டும் கே.ஜி.எஃப் பகுதிக்கு சென்று தனியார் விடுதியில் ஒரு நாள் தங்கி விட்டு மறுநாள் கொள்ளை கும்பல் குஜராத் மாநிலம் வாதோரா பகுதிக்கு தப்பி உள்ளனர்.

இந்த கொள்ளையர்கள் கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் உள்ள தனியார் விடுதிக்கு கொள்ளையடித்த பணத்துடன் 12 ம் தேதி காலை 7.40 மணிக்கு சென்றபோது அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் இவர்கள் கூகுள் மேப் உதவியுடன் டோல்கேட்டே இல்லாத பாதையை பயன்படுத்தி திருவண்ணாமலை முதல் கர்நாடகா மாநிலம் கே ஜி எஃப் வரை சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தமிழகம் கொண்டு வருகை!

அவர்கள் நேற்று இரவு விமானம் மூலம் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட்டனர். பின்னர் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு போலீஸ் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டு இன்று காலை திருவண்ணாமலை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதி அரசர் கவியரசன் என்பவரின் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டனர். இதனையடுத்து அவர்கள் இரண்டு பேரும் வேலூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு 12ஆம் தேதி தொடங்கி பதினெட்டாம் தேதி பாதி அளவு நிறைவடைந்துள்ளது. இவர்களை அடுத்த வாரத்தில் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரணை செய்து மற்ற குற்றவாளிகளையும் கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com