மனைவி கைது
மனைவி கைதுpt desk

திருவள்ளூர் | தீபாவளி சீட்டு நடத்தி ரூ.78 லட்சம் மோசடி – மனைவி கைது.. கணவர் தலைமறைவு...

சோழவரம் அருகே தீபாவளி சீட்டு நடத்தி ரூ.78 லட்சம் மோசடி செய்ததாக பெண் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான அவரது கணவரை குற்றப்பிரிவு காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
Published on

செய்தியாளர்: எழில்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த செம்புலிவரம் கிராமத்தைச் சேர்ந்த பவானி (35) என்பவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஏலச்சீட்டு, தீபாவளி சீட்டு மற்றும் நகை சீட்டு நடத்தி வந்துள்ளார். கடந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 50-க்கும் மேற்பட்டோரிடம் பணத்தை வசூலித்த பவானி மற்றும் அவரது கணவர் சங்கர், ரூ.78 லட்சம் பணத்தை திருப்பித் தராமல் மோசடி செய்துள்ளனர்.

மனைவி கைது
தென்காசி | ரகசிய தகவலை அடுத்து ரயிலில் சோதனை - ரூ.35 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் - இருவர் கைது

இதையடுத்து அவர்கள் தலைமறைவாகி விட்டதாக ஆவடி மாநகர காவல் ஆணையரக குற்றப் பிரிவில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் மோசடி வழக்குப் பதிவு செய்த ஆவடி மாநகர குற்றப்பிரிவு போலீசார் சென்னை வேலப்பன்சாவடியில் பதுங்கி இருந்த பவானியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாகியுள்ள அவரது கணவர் சங்கரை தேடி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com