பிரகாஷ் அவரது மனைவி
பிரகாஷ் அவரது மனைவிNGMPC22 - 168

கடன் தொல்லையால் தம்பதியினர் எடுத்த விபரீத முடிவு; கந்துவட்டி கொடுமை காரணமா?

திருவள்ளூர் அருகே கடன் தொல்லையால் விஷம் அருந்திய தம்பதியர் உயிரிழந்தனர். கந்துவட்டி காரணமாக உயிரிழப்பு நிகழ்ந்ததா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published on

ஆரம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி சரிதா. இவர்கள் இருவரும் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு இயக்கி வந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரிடம் தனது வியாபாரத்திற்காக 1.10 லட்ச ரூபாய் பிரகாஷ் கடன் வாங்கியதாக தெரிகிறது.

இதற்கு மாதாமாதம் வட்டி கட்டி வந்த நிலையில், கொரோனா காலகட்டத்தில் பிரகாஷால் வட்டியை ஒழுங்காக கட்ட முடியவில்லை.

இதனால் ராஜா, தனது பணத்துடன் வட்டியை சேர்த்து கேட்டதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த பிரகாஷ் அவரது மனைவி இருவருமே விஷம் குடித்து இறந்து இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com