திருத்தணி: கடன் தொல்லையால் ஏற்பட்ட குடும்பத் தகராறில் கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்!

திருத்தணியில் கடன் தொல்லையால் ஏற்பட்ட குடும்பத் தகராறில் மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார்.
accused
accusedpt desk

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நரசிம்மசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் விநாயகம் 42, கிரிஜா 35 தம்பதியர். இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகன் உள்ளார். இவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக பெங்களூரில் கூலி வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் திருத்தணி வீட்டிற்கு வந்தனர்.

house
housept desk

கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி கடன் பிரச்னையால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தகராறு நடந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்றிரவு இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த விநாயகம் கத்தியால் கிரிஜாவின் தலை மற்றும் கழுத்து பகுதியில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த கிரிஜா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து கிரிஜாவின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உள்புறம் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து திருத்தணி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது சடலமாக கிடந்த கரிஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வீட்டில் பதுங்கியிருந்த விநாயகத்தை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com