சென்னை: பட்டப்பகலில் கத்தியைக் காட்டி மிரட்டி 15 சவரன் திருட்டு

சென்னை: பட்டப்பகலில் கத்தியைக் காட்டி மிரட்டி 15 சவரன் திருட்டு

சென்னை: பட்டப்பகலில் கத்தியைக் காட்டி மிரட்டி 15 சவரன் திருட்டு
Published on

சென்னை செங்குன்றம் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து, கத்தியைக் காட்டி மிரட்டி 15 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் வெங்கடேசன். நேற்று பிற்பகல் பொழுதில் இவரது வீட்டின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு வெங்கடேசன் கதவை திறந்த பார்த்தார். அப்போது திடீரென்று வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி பெண்கள் கழுத்தில் அணிந்திருந்த 15 சவரன் நகைகளை பறித்து கொண்டு கண்ணமைக்கும் நேரத்தில் தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, வீட்டின் உரிமையாளர் வெங்கடேசன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற செங்குன்றம் காவல் துறையினர் மர்ம நபர்கள் குறித்த விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com