குற்றம்
ஓடும் ரயிலில் கத்தியை காட்டி கொள்ளை: பயணிகள் அதிர்ச்சி
ஓடும் ரயிலில் கத்தியை காட்டி கொள்ளை: பயணிகள் அதிர்ச்சி
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் ஓடும் ரயிலில் கத்தியை காட்டி மிரட்டி பயணி ஒருவரிடம் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் சக பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நெல்லூரை சேர்ந்த அஞ்சிரெட்டி என்பவர் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை செல்லும் புறநகர் ரயிலில் சென்று கொண்டிருந்த போது, மூன்று பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி மிரட்டி 5 சவரன் தங்க நகை, 6 ஆயிரம் ரூபாய், விலை உயர்ந்த இரண்டு செல்போன்கள் ஆகியவற்றை பறித்து கொண்டனர்.
பின்னர், கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கி தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து அஞ்சிரெட்டி கொருக்குப்பேட்டை இருப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை ரயில்வே போலீசார் தேடி வருகின்றனர்.