வைத்தியம் பார்க்க வந்ததாக ஏமாற்றி செயின் பறிப்பு
அம்பத்தூரில் மருத்துவரிடம் வைத்தியம் பார்க்க வந்தது போல் நடித்து 13 சவரன் தங்க நகை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.சென்னை அம்பத்தூர் செங்குன்றம் சாலையில் வசித்து வருபவர் மருத்துவர் ஜெயகுமார். இவரது மனைவி ரூபி. இவரும் மருத்துவர்கள். இருவரும் தங்களது வீட்டிலேயே மருத்துவம் பார்த்து வந்துள்ளனர். அப்பகுதியில் உள்ள எந்த நேரத்திலும் வந்து , தங்களது நோய்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் பெற்றுச் செல்வது வழக்கம்.
இந்த நிலையில் 45 வயது மதிக்கதக்க மர்ம நபர் ஒருவர் இரவு வயிற்று வலி என கூறி வைத்தியம் பார்க்க வந்துள்ளார். அப்போது வீடில் மருத்துவர் ரூபி மட்டும் இருந்துள்ளார்.இதனை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர் ரூபி கழுத்தில் அணிந்து இருந்த 13 சவரன் தங்க நகையை அறுத்துள்ளார்.ஆனால் 70 வயது முதியவரான ரூபி போராடியும் அவரை பிடிக்க முடியவில்லை. கண் இமைக்கும் நேரத்தில் வெளியில் தயார் நிலையில் இருந்த மற்றொருவருடன் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றார்.தப்பி சென்ற இருவரையும் அம்பத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..