கைதான ராமச்சந்திரன்pt desk
குற்றம்
தேனி: பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை - ஹாஸ்டல் வார்டன் போக்சோவில் கைது
தேனியில் பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் விடுதி வார்டன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
செய்தியாளர்: மலைச்சாமி
தேனி மாவட்டத்தில் இயங்கி வந்த அரசுப்பள்ளி விடுதியொன்றில் தங்கி படித்து வந்த மாணவனுக்கு, விடுதி வார்டன் ராமச்சந்திரன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக மாணவனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
Arrestedpt desk
விசாரணை செய்த காவல்துறையினர் குற்றத்தை உறுதி செய்து ராமச்சந்திரனை கைது செய்தனர். அப்போது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு உடல் நலம் தேறிய நிலையில் காவல் துறையினர் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.