குற்றம்
தேனி: சிறுமிக்கு கட்டாயத் திருமணம் - 3 பேர் மீது வழக்குப்பதிவு
தேனி: சிறுமிக்கு கட்டாயத் திருமணம் - 3 பேர் மீது வழக்குப்பதிவு
சிறுமிக்கு கட்டாயத் திருமணம் செய்த விவகாரத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஒத்தவீடு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை அவரது உறவினரான ரஞ்சித்குமார் (29) என்பவர், ஆசை வார்த்தை கூறி பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து சின்னமனூர் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் வைத்து இளைஞர், சிறுமியை கட்டாயத் திருமணம் செய்துள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் ரஞ்சித்குமார், இவருக்கு உடந்தையாக இருந்த அவரது தாய் ஜோதிமணி (48), சிறுமியின் சித்தி தேவி (25) ஆகியோர் மீது போடி அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பின்பு சிறுமியை கட்டாயத் திருமணம் செய்த இளைஞர் ரஞ்சித்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.