தேனி: ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவியை கடத்திச் சென்ற இளைஞர் போக்சோவில் கைது
பள்ளி மாணவியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்ற இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
தேனி மாவட்டம் தேவாரம் அருகேயுள்ள சொக்கலிங்கபுரம் கிராமத்தில் வசிக்கும் 17 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், பள்ளிக்குச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் கடந்த டிசம்பர் 25ம் தேதி தேவாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த சிவசக்தி பாண்டியன் (23) என்ற இளைஞர் மாணவியை காதலித்து வந்ததாகவும், ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்திச் சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து சிவசக்தி பாண்டியனை கைது செய்த தேவாரம் காவல் துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அவரை சிறையில் அடைத்தனர்.