தேனி | போலீசார் சோதனையில் சிக்கிய 6 கிலோ கஞ்சா பறிமுதல் - கணவன் மனைவி கைது
செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகர காவல் நிலையத்திற்கு வந்த ரகசிய தகவலின் படி, போலீசார் மற்றும் போதை தடுப்பு பிரிவு காவல் துறையினர், போடி குப்பிநாயக்கன்பட்டி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள குண்டாலீசுவரி கோயில் அருகே சந்தேகத்திற்குரிய முறையில் நின்றிருந்தவர்ளை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் தேவாரம் அருகே முத்தையன்செட்டிபட்டியைச் சேர்ந்த செல்வம் (46) மற்றும் அவரது மனைவி ஜமுனாராணி (40) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் வைத்திருந்த உடைமைகளை சோதனை செய்ததில், ஆறு கிலோ 300 கிராம் கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து அவர்கள் தேனி தேக்கம்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.