\
தேனி: போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் - புகார் அளித்த மாணவி தற்கொலை

தேனி: போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் - புகார் அளித்த மாணவி தற்கொலை

தேனி: போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் - புகார் அளித்த மாணவி தற்கொலை
Published on

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இளைஞர் கைது செய்யப்பட்ட நிலையில், மாணவி தற்கொலை செய்து கொண்டதால் வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே டொம்புச்சேரி பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் மணிகண்டன் (25). இவர், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு கத்தியை காட்டி மிரட்டி, டூவீலரில் கடத்திச் சென்று, பாலியல் தொந்தரவு செய்ததோடு வெளியே சொன்னால், கொலை செய்துவிடுவேன் என்றும் மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்தாக கடந்த 24 ஆம் தேதி பெற்றோருடன் மாணவி தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து புகார் மனு மீது விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நேற்று பள்ளி மாணவி திடீரென தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் இந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தேனி அனைத்து மகளிர் போலீசார், நேற்று மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, இன்று அவரை கைது செய்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com