சென்னையில் அதிகரிக்கும் கொள்ளை சம்பவங்கள்

சென்னையில் அதிகரிக்கும் கொள்ளை சம்பவங்கள்
சென்னையில் அதிகரிக்கும் கொள்ளை சம்பவங்கள்

சென்னையில் பட்டப்பகலில் நடக்கும் கொள்ளை சம்பவங்கள் ‌அதிகரித்து வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். 
 
கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பணிய‌ாற்றி ஓய்வுபெற்றவர்‌ சுஜாதா. 77 வயதான இவர் சென்னை நெற்குன்றம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்குள் பட்டப்பகலில் புகுந்த 2 முகமூடி கொள்ளையர்கள் சுஜாதாவை கட்டிப்போட்டு கத்திமுனையில் 11 சவரன் தங்க நகைகள், 10 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த முகமூடி கொள்ளையர்கள் கண்காணிப்பு கேமரா வயர்களை வெட்டி விட்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். 

இதேபோல அண்ணாநகர் ஏ பிளாக்கில் வசித்து வரும் அபுல்ஹாசனின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், பீரோவில் இருந்து 50 சவரன் தங்க நகைகள், 4 லட்சம் ரூபாய் ‌பணம் கொள்ளையடித்து சென்றனர். குடும்பத்தோடு அபுல்ஹாசன் வெளியூர் சென்றிருப்பதை தெரிந்துக்கொண்ட கொள்ளையர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. 

சென்னையில் பட்டப்பகலில் கொள்ளை சம்பவங்கள் அரங்கேற்றி ‌‌‌வரும் நிலையில் கொள்ளையர்கள் கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளதாக சென்னை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com