\
அம்மா உணவகம் சூறை: மர்ம நபர்கள் அட்டகாசம்

அம்மா உணவகம் சூறை: மர்ம நபர்கள் அட்டகாசம்

அம்மா உணவகம் சூறை: மர்ம நபர்கள் அட்டகாசம்
Published on

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலுள்ள அம்மா உணவகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் பொருட்களை சூறையாடினர்.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையப் பகுதியிலுள்ள அம்மா உணவகத்தை இன்று காலை ஊழியர்கள் திறந்தபோது, பின் பக்கப் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பாத்திரங்கள், அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் சூறையாடப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. அதையடுத்து நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், நகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com