போலீசாரிடம் இருந்து பிடுங்கிச் செல்லப்பட்ட இ-சலான் கருவி கண்டுபிடிப்பு - சிக்கிய இளைஞர்கள்

போலீசாரிடம் இருந்து பிடுங்கிச் செல்லப்பட்ட இ-சலான் கருவி கண்டுபிடிப்பு - சிக்கிய இளைஞர்கள்
போலீசாரிடம் இருந்து பிடுங்கிச் செல்லப்பட்ட இ-சலான் கருவி கண்டுபிடிப்பு - சிக்கிய இளைஞர்கள்

கிளியனூர் சோதனைச் சாவடியில் போலீசார் யிடம் இருந்து பிடுங்கிச் செல்லப்பட்ட இ-சலான் கருவி கண்டுபிடிப்பு- இருவர் கைது.

விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் காவல் நிலைய போலீசார் திருஞானம் மற்றும் கார்த்திக் ஆகியோர் மதுவிலக்கு சோதனைச் சாவடியில் நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்பொழுது அந்தப் பகுதியில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த நபர்களை போலீசார் நிறுத்த முற்பட்டபோது அப்பொழுது போலீசாரின் கையில் இருந்த இ-சலான் கருவியை அவர்களின் கையில் இருந்து ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்கள் பிடுங்கி சென்றனர்.இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா சம்பந்தப்பட்ட இரண்டு போலீஸாரிடம் விசாரணை செய்து அது சம்பந்தமாக டிஎஸ்பி தலைமையில் 10 தனி படைகள் அமைத்து பல்வேறு இடங்களில் தேடி வந்தனர் இந்த நிலையில் நேற்று இரவு ஒரு மணி அளவில் கொந்தமூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்பொழுது அவ்வழியாக வந்த லாரி ஓட்டுநர் போலீசாரின் சோதனையின் போது லாரியை நிறுத்தி நேற்று முன்தினம் சாலையில் கிடந்தது எனக்கூறி கொடுத்துவிட்டு சென்றனர் மேலும் பிடுங்கிச் சென்ற நபர்களை சிசிடிவி கேமரா அடிப்படையில் வாகன என்னை வைத்து தேடும்பொழுது அவர்கள் இருவரும் திருவண்ணாமலை மாவட்டத்தைப் சேர்ந்த சந்தோஷ் 20 மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த சதீஷ் 22 என்பது தெரிய வந்தது இதனை அடுத்த அவர்கள் இருவர் மீது வழக்கு பதிவு செய்து கிளியனூர் போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com