சேலத்தில் மாமியார் கொடுமையால் இளம் பெண் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
ஓமலூர் டேனிஷ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருக்கு சுமதி என்ற பெண்ணுடன் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சுமதிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதை விரும்பாத முருகன் மற்றும் அவரின் தாயார் இருவரும் சுமதியை அடித்துக் கொடுமைப்படுத்தியாக கூறப்படுகிறது. மேலும் அந்த பெண்னிடம் அடிக்கடி நகை கேட்டு வற்புறுத்தியாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சுமதி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் முருகனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தனது மகளை தினமும் கொடுமைப்படுத்தி வந்த முருகனின் தாயாரையும் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுமதியின் பெற்றோர் காவல் துறையிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.