\
வெளிநாட்டிலிருந்து வந்த பயணியின் பெட்டி கொள்ளை

வெளிநாட்டிலிருந்து வந்த பயணியின் பெட்டி கொள்ளை

வெளிநாட்டிலிருந்து வந்த பயணியின் பெட்டி கொள்ளை
Published on

சென்னை விமான நிலையத்தில், வெளிநாட்டில் இருந்து பயணி கொண்டுவந்த பொருள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை வேப்பேரி பகுதியைச் சேர்ந்தவர் சமில். இவர் ஹாங்காங்கில் இருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் பயணம் செய்து சென்னை வந்துள்ளார். விலையுர்ந்த கைக்கடிகாரம், அழகுசாதன பொருட்கள் உள்பட பல பொருட்களை சமில் அங்கிருந்து வாங்கி வந்துள்ளார். ஆனால் அவர் கொண்டு வந்த பெட்டி உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது. 

பெட்டியை பார்த்த சமில் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பாக அவர் விமான நிர்வாகத்திடமும், காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். மேலும் விமான பயணிகளிடம் பணம், நகை போன்றவை அடிக்கடி கொள்ளையடிக்கப்படுவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com