பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு: வதந்தி பரப்பியவர் மீது குற்றவியல் நடவடிக்கை

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு: வதந்தி பரப்பியவர் மீது குற்றவியல் நடவடிக்கை
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு: வதந்தி பரப்பியவர் மீது குற்றவியல் நடவடிக்கை
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் வினாத்தாள் வெளியானதாக வதந்தி பரப்பியவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,060 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான கணினி வழி தேர்வு நடைபெற்று வருகிறது. புதன்கிழமை நடைபெற்ற தேர்வின் வினாத்தாள், தேர்வு முடிந்த 15 நிமிடத்தில், ஒரு வெள்ளை காகிதத்தில் எழுதப்பட்ட நிலையில், சமூக வலைத்தளங்களில் பரவியது. இதுகுறித்து விசாரணை நடத்திய ஆசிரியர் தேர்வு வாரியம், நாமக்கல்லில் தேர்வு எழுதியவர், வினாக்களை பதிவு செய்து வந்து, தேர்வுக்குப் பின்னர் சமூக வலைதளங்களில் பரப்பியதை கண்டறிந்தது.
தேர்வு விதிமுறைகளை மீறிய அந்த நபர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ள ஆசிரியர் தேர்வு வாரியம், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு வினாத்தாள் எதுவும் முன்கூட்டியே வெளியாகவில்லை எனக் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com