\
ஆரணி: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் ஆசிரியர் மீது பெற்றோர் புகார்

ஆரணி: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் ஆசிரியர் மீது பெற்றோர் புகார்

ஆரணி: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் ஆசிரியர் மீது பெற்றோர் புகார்
Published on

ஆரணி அருகே தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முன்னாள் ஆசிரியர் மீது மாணவியின் தாயார் புகார் அளித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (32). இவர் 2016ம் ஆண்டு ஆரணியில் உள்ள ஓரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வந்தார். அவர் பணியாற்றிய போது அதே தனியார் பள்ளியில், ஆரணி டவுன் பகுதியைச் சேர்ந்த மாணவி 8ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதையடுத்து தனியார் பள்ளி ஆசிரியருக்கும் மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து ஆசிரியர் ராஜா குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசுப் பணியில் சேர்ந்து 4 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இருப்பினும் ஆரணியில் பள்ளி மாணவியிடையே நட்பு வளர்ந்துள்ளது. இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி ஆசிரியர் ராஜா, மாணவியுடன் தொடர்பில் இருப்பது மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் முன்னாள் ஆசிரியர் ராஜா மீது திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரணை செய்த ஆரணி மகளிர் காவல்நிலைய போலீசார் முன்னாள் ஆசிரியர் ராஜா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.

இதை அறிந்த ஆசிரியர் ராஜா தற்போது தலைமறைவாக உள்ளார். ஆரணி போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com