\
தாயை கொன்று விட்டு நாடகமாடிய மகன்: சிசிடிவி மூலம் வெளிவந்த உண்மை

தாயை கொன்று விட்டு நாடகமாடிய மகன்: சிசிடிவி மூலம் வெளிவந்த உண்மை

தாயை கொன்று விட்டு நாடகமாடிய மகன்: சிசிடிவி மூலம் வெளிவந்த உண்மை
Published on

குஜராத் மாநிலத்தில் மாடியிலிருந்து தள்ளி தாயை கொன்று விட்டு நாடகமாடிய மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராஜ்கோட்டில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேரராசிரியராக பணியாற்றி வருபவர் சந்தீப் நத்வானி. இவர் அதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றில் தனது தாய் மற்றும் மனைவியுடன் வசித்து வருகிறார். 64 வயதாகும் சந்தீப்பின் தாய் உடல் நலம் பாதிக்கப்பட்டவராக இருந்துள்ளார். சம்பவதன்று சந்தீப் தனது தாய் ஜெயாஸ்ரீயை வீட்டில் இருந்து வெளியே அழைத்து வந்து, அருகில் உள்ள மாடிக்கு அழைத்து சென்றுள்ளார். அதன் பின்பு, அவரை அங்கிருந்து தள்ளி விட்டு கொலை செய்துள்ளார். பின்னர், செய்த கொலையை மறைப்பதற்கு தனது தாய் மாடியிலிருந்து தவறுதலாக கீழே விழுந்து இறந்து விட்டதாக உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி, நடந்த இந்த சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக போலீசார் கணித்துள்ளனர். எனவே ராஜ்கோட் பகுதி காவல் துறையினர், இதுகுறித்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தீப் தனது தாயை மாடிக்கு அழைத்து சென்று கொலை செய்யும் காட்சிகள் அங்கிருக்கும் சிசிடிவி காமிரா ஒன்றில் பதிவாகியுள்ளன. தற்போது இந்த சிசிடிவி காமிரா காட்சிகளை வைத்து காவல்துறையினர், பேராசிரியர் சந்தீப்பை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com