ஆன்லைன் சூதாட்டத்தால் கடன்? கொள்ளையடிக்க துணிந்த ரயில்வே ஊழியர்: நடந்தது என்ன?

ஆன்லைன் சூதாட்டத்தால் கடன்? கொள்ளையடிக்க துணிந்த ரயில்வே ஊழியர்: நடந்தது என்ன?
ஆன்லைன் சூதாட்டத்தால் கடன்? கொள்ளையடிக்க துணிந்த ரயில்வே ஊழியர்: நடந்தது என்ன?

ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட கடனை அடைக்க மனைவியுடன் கொள்ளையடித்து விட்டு நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.

சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுன்ட்டர் நேற்று காலை நீண்ட நேரமாக திறக்கப்படாததால் சந்தேகமடைந்த பயணிகள் கவுன்ட்டருக்குள் எட்டிப்பார்த்த போது ஊழியர் கட்டிப்போட்டிருப்பது தெரியவந்ததையடுத்து, ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் ரயில்வே போலீசார் பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்து கட்டிப்போட்டிருந்த ஊழியரை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் டிக்கெட் அளிக்கும் ஊழியரான டீகா ராம் மீனா என்பதும், இரவு பணியில் இருந்த போது நள்ளிரவில் மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று திடீரென கவுன்டருக்குள் புகுந்து துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக தெரிவித்தார்.

பின்னர் கை, காலை கட்டிப்போட்டு கவுன்டரில் இருந்த 1.32 லட்சம் பணத்தை கொள்ளையடித்து தப்பிச்சென்றதாக வாக்குமூலம் அளித்தார். ரயில் நிலையம் சுற்றிலும் சிசிடிவிக்கள் இல்லாததால் ரயில்வே போலீசாருக்கு பெரும் சிக்கலாக அமைந்தது. இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

குறிப்பாக ரயில் நிலையத்திற்கு அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது ஜீன்ஸ் பேண்ட் அணிந்த பெண் ஒருவர் அதிகாலை 4 மணியளவில் ரயில் நிலையத்திற்கு செல்வது போல் பதிவாகி இருந்தது. இந்த பெண் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்திய போது டீகாராம் மீனாவின் மனைவி சரஸ்வதி என்பது தெரியவந்தது. சந்தேகமடைந்த போலீசார் டீக்காராமிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல் வெளியானது.

ஆன்லைன் சூதாட்டத்தில் அதிக ஆர்வம் கொண்டு லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததாகவும், வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் போனதால் வேறு வழியின்றி தனது மனைவியுடன் இணைந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட திட்டமிட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

தான் பணிப்புரியக்கூடிய ரயில் நிலையத்தை சுற்றிலும் சிசிடிவிக்கள் இல்லாததால் அதை சாதகமாக பயன்படுத்தி கொள்ளை நாடகமாட திட்டமிட்டதாகவும், இரவு பணி என்பதால் அதிகாலை நேரத்தில் தனது மனைவியை வரவழைத்து தன்னை கட்டிப்போட்டு 1.32லட்சம் பணத்தை கொடுத்துவிட்டு கொள்ளை சம்பவம் போல் நாடகமாடியதாக டீக்காராம் ஒப்புக்கொண்டார்.

உடனடியாக போலீசார் டீகாராமின் வீட்டிற்கு சென்று கொள்ளையடிக்கப்பட்ட பணமான 1.32 லட்சத்தை மீட்டு அவரது மனைவி சரஸ்வதியை கைது செய்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட இருவரிடமும் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com