தொடர் ஆடு திருட்டு - டூவிலரில் ஆட்டை தூக்கிச்சென்றபோது வசமாக மாட்டிய நபர்!

தொடர் ஆடு திருட்டு - டூவிலரில் ஆட்டை தூக்கிச்சென்றபோது வசமாக மாட்டிய நபர்!
தொடர் ஆடு திருட்டு - டூவிலரில் ஆட்டை தூக்கிச்சென்றபோது வசமாக மாட்டிய நபர்!

திருத்துறைப்பூண்டி அருகே தொடர் ஆடு திருட்டில் ஈடுபட்டு வந்த நபரை போலீசார் கைதுசெய்தனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வட சங்கேந்தி பகுதியில் தொடர்ந்து ஆடுகள் காணாமல் போவதாக இடையூர் காவல் நிலையத்திற்கு அதிகமான புகார்கள் வந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு வட சங்கேந்தி பகுதியைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்பவரது ஆடு காணாமல் போனது பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில் ஆடு திருட்டில் ஈடுபடும் நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் ஆடு ஒன்றை தூக்கிக் கொண்டு செல்வது சங்கேந்தி பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த சிசிவிடி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் இருவரையும் தீவிரமாக தேடிவந்த நிலையில் இன்று சித்தமல்லி பகுதியைச் சேர்ந்த 25 வயதான ராமன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் தலைமறைவான அவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர். தொடர்ந்து இவர்கள்தான் பல்வேறு பகுதிகளில் ஆடு திருட்டில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com