கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட கும்பல் கைது

கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட கும்பல் கைது

கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட கும்பல் கைது
Published on

சென்னையில் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டதாக பெண் உட்பட மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  

சென்னை மாதவரத்தில் உள்ள அரசு மதுபானக் கடை ஒன்றில் இரவு 8 மணியளவில் இளைஞர் ஒருவர் ₹500 நோட்டை கொடுத்து மது வாங்கியுள்ளார். அந்த ரூபாய் நோட்டில் சந்தேகம் அடைந்த கடையின் மேலாளர் சுதாகர், அந்த நபரை கேட்ட போது அவர் தப்பியோடினார். பின் பொதுமக்களின் உதவியோடு, தப்பியோடிய அந்த இளைஞனை பிடித்து மாதவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

இதனைத்தொடர்ந்து பிடிப்பட்ட அந்ந நபரிடம் விசாரணை செய்ததில், அவர் மாதவரம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பதும், அவனிடம் ₹9500 கள்ள நோட்டுகள் இருப்பதையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். பின்னர் அவரிடம் மேல் விசாரணை செய்த போதுதான் பணிபுரியும் கடைக்கு பக்கத்து வீட்டில் சாகுல் என்பவர் வீட்டில் வீட்டு வேலை செய்யும் ரெஜீனாபேகம் என்ற பெண்ணிடம் ₹10000 கடன் கேட்டதாகவும் அந்தப் பெண்மணி சாகுலிடமிருந்து ₹10000 கடன் பெற்று தந்தாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வியாசர்பாடியிலுள்ள சாகுல் அமீது வீட்டில் சோதனை செய்த போது கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படுத்தபட்ட ஜெராக்ஸ் எந்திரம், ₹60000 மதிப்பிலான ₹500 கள்ள நோட்டுகள் மற்றும் கள்ள நோட்டுகளை அச்சடிக்க பயன்படுத்தபட்ட வெள்ளைத்தாள் போன்றவற்றை கைப்பற்றினர். பின்னர் வீட்டில் மதுபோதையிலிருந்த சாகுல்அமீது மற்றும் சென்னை தண்டையார்பேட்டை ஐ.ஓ.சி யைச் சேர்ந்த ரெஜீனா என்ற பெண்ணையும் காவல்துறையினர் பிடித்து விசாரனை செய்து வருகின்றனர். 

மேலும் இந்தக் கள்ள நோட்டு அச்சடிக்க மூளையாக செயல்பட்ட தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் அவரது நண்பன் ரமேஷ் என்பவன் மூலம் பழக்கமானதாகவும் கூடிய விரைவில் பணக்காரர் ஆகலாம் என்ற ஆசையில் இந்தக் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டதாகவும் சாகுல்அமீது காவல்துறையினரிடம் தெரிவித்தார். இதனால் கள்ள நோட்டு விவகாரத்தில் இந்த இரு நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com