\
அன்புச்செழியனைப் பிடிக்க காவல்துறையினர் புதுவியூகம்

அன்புச்செழியனைப் பிடிக்க காவல்துறையினர் புதுவியூகம்

அன்புச்செழியனைப் பிடிக்க காவல்துறையினர் புதுவியூகம்
Published on

அசோக்குமார் தற்கொலை விவகாரத்தில் தலைமறைவாக உள்ள பைனான்சியர் அன்புச்செழியனை பிடிக்க தனிப்படை காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். 

நடிகர் மற்றும் இயக்குநர் சசிகுமாரின் அத்தை மகனும், அவரின் தயாரிப்பு நிறுவனத்தை கவனித்து வந்தவருமான அசோக்குமார், சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை கடிதத்தில், பைனான்சியர் அன்புச்செழியன்தான் தனது தற்கொலைக்கு காரணம் என்றும் அவர் கூறியிருந்தார். இதையடுத்து இணை தயாரிப்பாளர் அசோக்குமார் தலைமறைவானார். இவருக்கு எதிராக சினிமா துறையில் இருந்து பல நடிகர், நடிகைகள் பேட்டி அளித்தனர். இந்நிலையில் இவரை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.  

முதலில் அன்புச்செழியனைப் பிடிக்க பெங்களூரு, ஹைதராபாத் சென்ற காவல்துறையினர் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதனையடுத்து அன்புச்செழியனை பிடிக்க தனிப்படை காவல்துறையினர் புதுவியூகம் வகுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு அவரைப் பிடிக்கத் திட்டமிட்டுள்ளனர். மேலும், அன்புச்செழியன் எங்கே இருக்கிறார் என்பது குறித்து அவரது உறவினர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தவும் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com