பிரான்ஸில் வேலை வாங்கி தருவதாக ரூ.19 லட்சம் மோசடி- தம்பதியருக்கு போலீஸ் வலைவீச்சு

பிரான்ஸில் வேலை வாங்கி தருவதாக ரூ.19 லட்சம் மோசடி- தம்பதியருக்கு போலீஸ் வலைவீச்சு

பிரான்ஸில் வேலை வாங்கி தருவதாக ரூ.19 லட்சம் மோசடி- தம்பதியருக்கு போலீஸ் வலைவீச்சு
Published on

பிரான்ஸ் நாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.19 லட்சம் மோசடியில் ஈடுப்பட்ட காரைக்காலை சேர்ந்த தம்பதியினரை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி லாஸ்பேட்டை நாவற்குளம் ராஜாஜி நகரைச் சேர்ந்த சண்முகம் (42) கட்டிட பணி செய்து வருகிறார். இவருக்கு காரைக்கால் மேலஒடுதுறையை சேர்ந்த ராஜ்குமார் அவரது மனைவி அமுதா ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்கள் தாங்கள் இருவரும் பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர்கள் எனவும், புதுச்சேரியை சேர்ந்தவர்களை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதை நம்பிய சண்முகம், தானும் பிரான்ஸ் நாட்டிற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என அமுதாவிடம் கூறியுள்ளார். இதற்கு அமுதா பிரான்ஸ் செல்ல பாஸ்போர்ட் விசா மற்றும் அங்கு தங்க ஏற்பாடு செய்ய ரூ.16 லட்சம் வேண்டும் என கேட்டுள்ளார். இதனை அடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமுதாவின் வங்கி கணக்கில் ரூ. 16 லட்சத்தை சண்முகம் செலுத்தி உள்ளார். இதில் ரூ. 3 லட்சம் பணம் வந்து சேரவில்லை என கூறி மேலும் ரூ. 3 லட்சம் ரொக்க பணத்தையும், சண்முகத்தின் பாஸ்போர்ட்டையும் புதுச்சேரிக்கு நேரில் சென்று அமுதாவும் அவரது கணவரும் வாங்கி சென்றுள்ளனர்.

பின்னர் சண்முகம் அமுதாவை தொடர்பு கொள்ள முயன்றபோது அவரது செல்போஃன் சுவிட்ச் ஆஃபில் இருந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். பின் சண்முகம் அவர்களை குறித்து விசாரித்ததில்  கணவன், மனைவி இருவரும் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி, பலரிடம் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து சண்முகம் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள காரைக்கால் தம்பதியினரை தேடி வருகின்றனர். மேலும் அவர்களை கைது செய்த பின்னரே அவர்கள் யார் யாரிடம் பண மோசடியில் ஈடுப்பட்டுள்ளனர் என தெரியவரும் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com