ஜிஎஸ்டி அதிகாரி போல் நடித்து பணம் வசூல் செய்த நபர் கைது

ஜிஎஸ்டி அதிகாரி போல் நடித்து பணம் வசூல் செய்த நபர் கைது

ஜிஎஸ்டி அதிகாரி போல் நடித்து பணம் வசூல் செய்த நபர் கைது
Published on

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கிழக்கு வலசு பகுதியில் ஜிஎஸ்டி துறை அதிகாரி போல் நடித்து பணம் வசூல் செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

கரூரை சேர்ந்த வெங்கடேஸ்வரன் என்பவர் ஜிஎஸ்டி துறை அதிகாரி என கூறி பல்வேறு இடங்களில் பணமோசடி செய்து வந்துள்ளார். இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள பல நிறுவனங்களுக்கு சென்று ஜிஎஸ்டி துறை அதிகாரி போல் நடித்து மிரட்டி பணம் வசூல் செய்துள்ளார். அவரது நடத்தையில் சந்தேகமடைந்த சிலர் இதுதொடர்பாக, காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் வெண்ணந்தூர் காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com