இளம்பெண்ணை குண்டுகட்டாக தூக்கி சென்ற மர்ம நபர்

இளம்பெண்ணை குண்டுகட்டாக தூக்கி சென்ற மர்ம நபர்

இளம்பெண்ணை குண்டுகட்டாக தூக்கி சென்ற மர்ம நபர்
Published on

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மர்ம நபர் ஒருவர், நடைபாதையில் நடந்து சென்ற இளம் பெண்ணை காரில் கடத்தி சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் 79வது மேற்கு தெருவில் இரவு 11:50 மணியளவில் இளம்பெண் ஒருவர் நடைப்பாதையில்  நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அந்தப் பெண்ணை குண்டுகட்டாக தூக்கி தன்னுடைய காரில் ஏறும்படி வற்புறுத்தி உள்ளார். தன்னை காப்பாற்றும்படி அந்த பெண் குரல் கொடுப்பதும், தப்பிக்க முயற்சிப்பதும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்த சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகர காவல்துறையினர், குற்றவா‌ளியைப் பிடிக்க பொதுமக்கள் உத‌வ வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், குற்றவாளி பயன்படுத்திய காரின் பதிவு எண்ணை வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com