குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் - கைதானவர் கொடுத்த பகீர் வாக்குமூலம்

குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் - கைதானவர் கொடுத்த பகீர் வாக்குமூலம்

குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் - கைதானவர் கொடுத்த பகீர் வாக்குமூலம்
Published on

குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் மதுபோதையில் மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவித்து உள்ளார்.

நேற்று சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசிய மர்மநபர் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டார். உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து ரயில்வே போலிசார் உஷார் படுத்தப்பட்டு, ரயிலில் சோதனையிட அறிவுறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலை செங்கல்பட்டில் நிறுத்தி சோதனை செய்ய முடிவெடுத்தனர். ஆனால், ரயில் அங்கிருந்து தாம்பரம் நோக்கி புறப்பட்டது. பின்னர் தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயிலில் மோப்ப நாய் உதவியுடன் ரயில்வே போலீசார் சோதனை செய்தனர். பயணிகளின் உடைமைகளையும் சோதனை செய்து பார்த்ததில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. அதன் பிறகு ரயில் எழும்பூர் சென்றது.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என போலீசார் விசாரணை நடைபெற்ற நிலையில், செல்போன் எண்ணின் முகவரியை வைத்து, அவர் வேளச்சேரியை சேர்ந்த சதிஷ்பாபு(35) என்பதை கண்டறிந்து அவரை கைது செய்தனர். விசாரணையில் அவருடைய மனைவி வசந்தி வீட்டை விட்டு சென்றதால் விரக்தியில் மது அருந்தியுள்ளார். போதை தலைக்கேறியதால் மது போதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். பள்ளிகரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து எச்சரித்து காவல் நிலைய பிணையில் அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com