நாஞ்சில் சம்பத்தை ஆஜராகுமாறு புதுச்சேரி போலீசார் துன்புறுத்தக் கூடாது: உயர்நீதிமன்றம்

நாஞ்சில் சம்பத்தை ஆஜராகுமாறு புதுச்சேரி போலீசார் துன்புறுத்தக் கூடாது: உயர்நீதிமன்றம்
நாஞ்சில் சம்பத்தை ஆஜராகுமாறு புதுச்சேரி  போலீசார் துன்புறுத்தக் கூடாது: உயர்நீதிமன்றம்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பற்றி அவதூறாகப் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் நாஞ்சில் சம்பத்தை ஏப்ரல் 24ம் தேதி வரை துன்புறுத்தக் கூடாது எனப் புதுச்சேரி காவல்துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி குறித்து அவதூறாகப் பேசியதாக, நாஞ்சில் சம்பத் மீது தவளக்குப்பம் காவல்நிலையத்தில் கடந்தாண்டு மார்ச் மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை தொடர்பாகக் கன்னியாகுமரி மாவட்டம், மணக்காவிளையில் உள்ள நாஞ்சில் சம்பத் வீட்டிற்குக் கடந்த19 ம் தேதி புதுச்சேரி காவல்துறையினர் சென்றனர்.

இதையடுத்து, புதுச்சேரி காவல் துறையினர் தன்னை துன்புறுத்தக் கூடாது என்று உத்தரவிடக்கோரி, நாஞ்சில் சம்பத் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கிரண்பேடி பற்றித் தான் பேசியதற்காக ஓராண்டு கழித்து, காவல்துறையினர் தன்னை கைது செய்ய முயற்சிப்பதாகவும், தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விசாரணைக்காக தன்னால் புதுச்சேரி செல்ல முடியாத நிலை உள்ளதாக நாஞ்சில் சம்பத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஏப்ரல் 24 ம் தேதி வரை நாஞ்சில் சம்பத்தைத் துன்புறுத்தக் கூடாது எனப் புதுச்சேரி காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். மேலும், விசாரணைக்கு ஆஜராவது தொடர்பாக நாஞ்சில் சம்பத்திற்கு புதிய நோட்டீசை அனுப்பவும் காவல்துறையினருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com