டெல்லியில் துப்பாக்கி முனையில் பெண்ணிடம் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள பிரஹாம்புரி பகுதியில் சாலையில் நடந்துச்செல்லும் இரு பெண்களை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தபடி இருவர் வருகின்றனர். வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்தவர், துப்பாக்கியை காண்பித்தவாறு அப்பெண்களை நெருங்குகிறார். அவரின் மிரட்டலுக்கு பயந்து அப்பெண்களில் ஒருவர், தனது கழுத்தில் இருந்து தங்க செயினை கழற்றி கொடுக்கிறார்.
மற்றொரு பெண் அழைப்பின்பேரில் உதவிக்கு வந்தவரையும் துப்பாக்கி காட்டி மிரட்டிய அந்நபர், நகையுடன் தப்பித்துச்செல்கிறார். அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள இக்காட்சிகளை வைத்து மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.