ஓசூர் தம்பதியைக் கடத்தி நகை பறித்த கும்பலை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்

ஓசூர் தம்பதியைக் கடத்தி நகை பறித்த கும்பலை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்
ஓசூர் தம்பதியைக் கடத்தி நகை பறித்த கும்பலை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்

ஓசூர் அருகே தம்பதியினரை தாக்கி நகை மற்றும் பணம் பறித்த கும்பல், அவர்களை காரில் கடத்த முயன்ற போது பிடிபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓசூர் ராஜேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் சர்வேஸ்வரன். தனியார் நிறுவனம் நடத்தி வரும் இவர், நேற்று முன்தினம் தனது மனைவி ஸ்ரீபிரியா உடன் பெங்களூரு விமான நிலையத்திற்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பாகலூர்-மாலூர் சாலையிலுள்ள ஜெயின் பார்ம்ஸ் அருகில் தங்களின் சொகுசு காரில் சென்று கொண்டிருந்தபோது 8 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்தனர். 

இதனைத்தொடர்ந்து காரின் கண்ணாடியை உடைத்த அந்தக் கும்பல், கத்தி முனையில் ஸ்ரீபிரியா அணிந்திருந்த 16 பவுன் தங்கநகைகள், வைர நகை மற்றும் அவர் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் பணத்தைப் பறித்தனர். இதனால் நிலைகுலைந்த சர்வேஸ்வரன் அதிச்சியடைந்தார். மேலும் அவர்களைக் கடத்தி பணம் பறிக்க திட்டமிட்ட அந்தக் கும்பல், சர்வேஸ்வரன் மற்றும் ஸ்ரீபிரியாவை காரில் கடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் செய்வதறியாது திகைத்துள்ளனர். அப்போது கார் வழித்தவறிச் செல்லும் வழியில் கணவன்-மனைவி இருவரும் கூச்சலிட்டுள்ளனர். அதனையறிந்த பொதுமக்கள் அந்த காரையும் கும்பலையும் துரத்தியுள்ளனர்.

இதனையடுத்து அந்தக் கொள்ளை கும்பல் காரை நிறுத்தி தப்ப முயன்ற போது 2 பேர் மட்டும் காலில் அடிபட்டு சுருண்டு விழுந்தனர். மற்ற கொளையர்கள் 6 பேரும் அவர்கள் வந்த காரில் நகைகள், பணத்துடன் தப்பி ஓடி விட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த பாகலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிடிபட்ட 2 கொள்ளையர்களையும் விசாரணைக்காக அழைத்து சென்றனர். 

விசாரணையில் அவர்கள் சேலம் சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கதிர்வேல் மற்றும் கோவிந்தராஜ் எனத் தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சினிமாவில் வருவதை போல கொள்ளையர்களை பொதுமக்கள் துரத்தி பிடித்த சம்பவம் ஓசூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com