பெற்ற குழந்தைகளை 250 அடி பள்ளத்தில் தூக்கி வீசிய தந்தை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

பெற்ற குழந்தைகளை 250 அடி பள்ளத்தில் தூக்கி வீசிய தந்தை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

பெற்ற குழந்தைகளை 250 அடி பள்ளத்தில் தூக்கி வீசிய தந்தை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொல்லிமலையில் தனது இரு குழந்தைகளை மலையில் இருந்து 250 அடி பள்ளத்தில் தூக்கி வீசி தந்தையே கொலைசெய்த வழக்கில், இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது நாமக்கல் மகிளா நீதிமன்றம்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் குண்டூர்நாடு அடுத்துள்ள அரசம்பட்டி ஊரில் சிரஞ்சீவி-பாக்கியம் என்ற தம்பதியினர் கிரிதாஸ் என்ற 8 வயது மகன் மற்றும் கவிதர்ஷினி என்ற 5 வயது மகளுடன் இருந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி சிரஞ்சீவிக்கும் அவரது மனைவி பாக்கியத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சிரஞ்சீவி தனது இரு குழந்தைகளையும் அழைத்து கொண்டு செம்மேடு சீக்குபாறை பகுதியில் அமைந்துள்ள வியூ பாயிண்ட் மீது ஏறி சுமார் 250 அடி பள்ளத்தில் இரு குழந்தைகளையும் தூக்கி வீசி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.

பின்னர் சிரஞ்சீவி தனது குழந்தைகளின் புகைப்படத்தை வைத்து அழுவதை கண்டு சந்தேகமடைந்த மனைவி மற்றும் உறவினர்கள் அவரிடம் கேட்ட போது, அவர் எந்த பதிலும் சொல்லாத நிலையில் மனைவி பாக்கியம் வாழவந்திநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் தனது குழந்தைகளை சீக்குபாறை வியூ பாயிண்டிலிருந்து தூக்கி வீசி கொலை செய்ததை ஒப்பு கொண்டார் சிரஞ்சீவி.

இதனை தொடர்ந்து குழந்தைகளை தூக்கி வீசிய இடத்தில் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் உதவியுடன் சடலத்தை மீட்ட வாழவந்திநாடு போலீசார் சிரஞ்சீவியை கைது செய்தனர்.

இந்த வழக்கு நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் சிரஞ்சீவிக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 30 ஆயிரம் அபராதமும் விதித்து அதனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதனையடுத்து சிரஞ்சீவி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com