\
முன்விரோதம் காரணமாக விவசாயி வெட்டிப் படுகொலை

முன்விரோதம் காரணமாக விவசாயி வெட்டிப் படுகொலை

முன்விரோதம் காரணமாக விவசாயி வெட்டிப் படுகொலை
Published on

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியில் முன்விரோதம் காரணமாக விவசாயி வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் நெடுங்கவாடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா - அமுதா தம்பதியினர். விவசாயியான ராஜாவுக்கு லதா, செல்வி என்ற இரு மகள்கள் உள்ளனர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் நிலம் தொடர்பாகவும், கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அதிகாலையில் வெளியில் சென்ற ராஜா வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி ,ஊரில் உள்ளவர்களிடம் தெரிவித்தார். தேடியதில், வெளியில் சென்றவரை மர்மநபர்கள் சிலர் வெட்டிப் படுகொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த சாத்தனூர் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக கொலை சம்பவம் நடைபெற்றதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com