புகார் செய்தது உண்மை இல்லை என்கிறது ஆர்.டி.ஐ. ? தகவல் அளிப்பதில் அலட்சியமா ?

புகார் செய்தது உண்மை இல்லை என்கிறது ஆர்.டி.ஐ. ? தகவல் அளிப்பதில் அலட்சியமா ?

புகார் செய்தது உண்மை இல்லை என்கிறது ஆர்.டி.ஐ. ? தகவல் அளிப்பதில் அலட்சியமா ?
Published on

வேலூர் மாவட்டம் வசந்தம் நகர் சத்துவாச்சாரி பேஃஸ் 3 பகுதியை சேர்ந்தவர் பாபு (36), சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர் துளசி (26). இவர்கள் இருவரும் திருமணம் செய்து தம்பதிகளாக வேலூர் சத்துவாச்சாரியில் வாழ்ந்து வந்துள்ளனர்.  இந்நிலையில் பாபபுவின் மனைவி துளசி கடந்த ஆண்டு 21.12.2017 ம் தேதி தனது மாமியார் என்னிடம் வீண் பிரச்சனை செய்து தகாத முறையில் பேசி வருவதாகவும் அவரை அழைத்து விசாரிக்க வேண்டும் என்றும் வேலூர் அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரை பெற்றுக்கொண்ட மகளிர் காவல் நிலையம் துளசிக்கு CSR-ம் வழங்கியுள்ளது. பின் நாளில் கணவன்-மனைவி இருவரையும் அழைத்து இருவரிடமும் சமரச மனுவும் எழுதி வாங்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து பாபு துளசியிடம் இருந்து விவாகரத்து கேட்டு வேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய இருந்துள்ளார். இதற்க்காக தனது மனைவி அளித்த புகார் மனு, CSR COPY, சமரச மனு ஆகியவற்றை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கடந்த 23.01.2018 அன்று கேட்டுள்ளார். இதற்க்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து 19.03.2018 அன்று பாபுவுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மாவட்ட தகவல் அளிக்கும் அதிகாரி வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து தகவலை பெற்று பதில் அளித்துள்ளார். 

அந்த பதிலில் துளசி என்பவர்21.12.2017 அன்று எந்தவித புகாரும் அளிக்கப்படவில்லை. துளசி அளித்த புகாரின் பேரில் CSR மனுவும் வழங்கப்பவில்லை. துளசி மற்றும் மனுதாரராகிய பாபு ஆகிய இருவரும் சமரச மனுவையும் எழுதி கொடுக்கவோ அளிக்கவோ இல்லை என கூறப்பட்டுள்ளது. ஆனால் 21.12.2017 அன்று துளசி வேலூர் அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகார் மனு மீது CSR-ம் போடப்பட்டு பின் நாளில் இருவரிடம் சமரச மனுவும் பெறப்பட்டுள்ளது. 
துளசி கொடுத்த புகார் மனு மீது CSR போடப்பட்டுள்ளது. தற்போது வரை அது இணையதளத்தில் உள்ளது. ஆனால் தகவல் அறியும் சட்டத்தில் கேட்டதற்க்கு   இத்தகவல்கள் அனைத்தும் தவறாக கூறப்பட்டுளது. வேலூர் மகளிர் காவல் நிலைய காவலர்கள் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அலட்சியமாக பதில் அளித்துள்ளதாக குற்றம் சாட்டுகிறார் பாபுவின் வழக்கறிஞர் ராஜகுரு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com