திராவிட குடியரசு  கோரிய அமெரிக்க நபர் மீதான வழக்கு வாபஸ்

திராவிட குடியரசு கோரிய அமெரிக்க நபர் மீதான வழக்கு வாபஸ்

திராவிட குடியரசு கோரிய அமெரிக்க நபர் மீதான வழக்கு வாபஸ்
Published on

திராவிட குடியரசு அமைப்பது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அமெரிக்க நபருக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணை நடத்த கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வசிக்கும் துன்கு வரதராஜன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களை உள்ளடக்கிய திராவிட குடியரசு அமையும் என பதிவு செய்திருந்தார். இது நாட்டை துண்டாடும் வகையில் உள்ளதாக கூறி, இதுசம்பந்தமாக என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிட கோரி சென்னையைச் சேர்ந்த வைகுந்த் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, யாரோ, எதையோ சொன்னார்கள் என்பதை வைத்து பிரச்னையை கிளப்பக் கூடாது எனவும், அனைத்து விஷயங்களும் தீவிரமாக்கப்படுவதாகவும், குழப்பத்தை உருவாக்க முயற்சிப்பதாகவும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து, மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் அனுமதி கோரியதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிக்கலாம்: 'தலைவா வா தலைமையேற்க வா'- அதிமுகவில் ஒற்றைத் தலைமைக்கு ஆதரவாக போஸ்டர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com