கல்பாக்கம்: ஆம்லெட்டுக்காக நடந்த சண்டை; போதையில் உறங்கி கொண்டிருந்த உறவினரை தாக்கிக் கொன்ற நபர் கைது

கல்பாக்கம் அருகே தன்னுடைய மைத்துனரே உருட்டுக் கட்டையால் தாக்கிக் கொன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர்
உயிரிழந்தவர்PT

கல்பாக்கம் அருகே ஆம்லெட்க்காக மைத்துனரை கொலை செய்த உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே புதுப்பட்டினத்தில் மது போதையில் ஆம்லேட் சாப்பிடுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக முருகன் மற்றும் செல்லப்பன் ஆகிய இருவரிடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் முருகன் தாக்கியதில் செல்லப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உடலை கைப்பற்றிய கல்பாக்கம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, முருகனை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவர்
விமானம் மூலம் வந்து கொள்ளையடித்து தப்பி செல்லும் ராஜஸ்தான் கொள்ளையர்கள்! தீரன் பட பாணியில் கைது!

அதாவது, செல்லப்பன் போதையில் கடை வாசலில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது முருகன் தான் கையில் கொண்டு வந்த உருட்டு கட்டையால் செல்லப்பனை தாக்கி கொலை செய்யும் காட்சி அருகில் இருந்த கடையின் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இதை போலீசார் கைப்பற்றி இந்தக் கொலை ஆம்லெட்டுக்காக நடைபெற்றதா அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com