அரியலூர்: மின்வேலியில் சிக்கி உயிரிழந்தவரின் உடலை துண்டாக்கி சாக்குப்பையில் மறைத்த கொடுமை

அரியலூர்: மின்வேலியில் சிக்கி உயிரிழந்தவரின் உடலை துண்டாக்கி சாக்குப்பையில் மறைத்த கொடுமை

அரியலூர்: மின்வேலியில் சிக்கி உயிரிழந்தவரின் உடலை துண்டாக்கி சாக்குப்பையில் மறைத்த கொடுமை
Published on

பன்றி தொல்லைக்காக வைத்த மின்வேலியில் அடிப்பட்டு விவசாயி மரணமடைந்துள்ளார். 10 நாட்களுக்குப் பிறகு கரும்பு கொல்லையில் இரண்டு சாக்கு பையிவ் பிணம் கண்டெடுக்கப்பட்டது.

அரியலூர் மாவட்டம் சேனாபதி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சவரிமுத்து. இவருக்கு ஜெசிந்தாமேரி என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி இரவு வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றவர் விடிந்தும் வீடு திரும்பவில்லை.


இதனையடுத்து அவர்கள் குத்தகைக்கு எடுத்த நெல் வயலுக்கு சென்று பார்த்தபோது அங்கு சவரிமுத்துவின் செருப்பு மற்றும் இருசக்கர வாகனம் மட்டும் இருந்தது. செல்போன் சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்தது. இதனால் அதிர்ந்துபோன அவரது மனைவி திருமானூர் போலீசாரிடம் புகார் கொடுத்தார்.

போலீசார் விசாரணையில் சவரிமுத்து வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றபோது பக்கத்து வயலில் பன்றி தொல்லைக்காக வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி இறந்துள்ளார். இது வெளியில் தெரிந்தால் போலீசில் மாட்டிக்கொள்வோம் என்று பயந்த மிராசுதார், பிணத்தை முதலில் மறைத்து வைத்துள்ளார்.

நான்கு நாட்களுக்குப் பிறகு உடலை இரண்டு துண்டாக்கி 2 சாக்கு பையில் போட்டு கொள்ளிடத்தில் போடலாம் என தூக்கி வந்துள்ளனர். அப்போது கிராம மக்கள் சவரிமுத்துவை தேடி வந்த நிலையில் பிணத்தை மற்றொருவர் கரும்பு கொல்லையில் மறைத்து வைத்துள்ளார்.

இது போலீசாரின் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து தற்போது பிணத்தை கைப்பற்றி அதே இடத்தில் பிரேத பரிசோதனை சொய்தனர். இது தொடர்பாக முருகேசன் மற்றும் அவருக்கு உதவிய கணேசன், சாமிதுரை ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த பகுதியில் கரும்பு கொல்லைக்கு இரவில் மின்வேலி அமைப்பதால்தான் பிரச்னை ஏற்படுவதாக பொது மக்கள் குற்றம்சாட்டினர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com