இருதரப்பு மோதலின்போது திருடு போன வைர மோதிரம் - பாஜக இளைஞரணி செயலாளர் கைது! முழு பின்னணி...

இருதரப்பு மோதலின்போது திருடு போன வைர மோதிரம் - பாஜக இளைஞரணி செயலாளர் கைது! முழு பின்னணி...
இருதரப்பு மோதலின்போது திருடு போன வைர மோதிரம் - பாஜக இளைஞரணி செயலாளர் கைது! முழு பின்னணி...

கோவையில் கடந்த மாதம் நட்சத்திர ஹோட்டல் முன்பு நடந்த ரகளையின் போது வைர மோதிரம் கொள்ளை போன வழக்கு தொடர்பாக பாஜக இளைஞர் அணி செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மோதிரத்தை பறிகொடுத்தவர் மற்றும் கைது செய்யப்பட்டவர் இருவருமே பாஜகவை சேர்ந்தவர்களாவர்.

கோவை சரவணம்பட்டி ரெவீன்யூ நகரை சேர்ந்தவர் ஜான்சன். இவர் பாஜக சிறுபான்மை பிரிவு கோவை மாவட்டத் தலைவராக உள்ளார். கடந்த மாதம் 10ம் தேதி இவர் தனது மகனான டேவிட் பிறந்த நாளுக்காக கோவை ரேஸ்கோர்சில் கலெக்டர் முகாம் அலுவலகம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார். அங்கு நடந்த ஜோடிகள் நடன நிகழ்ச்சியை பார்க்க ரூ.2,500 பணம் கட்டினார். அப்போது அங்கிருந்த கணக்காளர் விஷ்ணு பாரதி ஜோடியாக வருபவர்கள் மட்டும் இதில் பங்கு கொள்ள முடியும் என்று கூறி அனுமதி மறுத்தார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னர் அது கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த விஷ்ணு பாரதி மற்றும் அங்கு தங்கி இருந்த ஓட்டல் பவுன்சர்கள் சேர்ந்து ஜான்சனையும் அவரது மகன் டேவிட்டையும் சரமாரியாக தாக்கினர். இதில் ஜான்சன் மகன் டேவிட் பல் உடைந்தது. அவர் அணிந்திருந்த வைர மோதிரம் களவு போனது. அதன் மதிப்பு ரூ.3 லட்சம் எனத் தெரிகிறது. டேவிட் படுகாயத்துடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

மேலும் பா.ஜ.க சிறுபான்மை பிரிவுத் தலைவர் ஜான்சன் ஒட்டலில் தாக்கப்பட்ட வீடியோ வைரலாக பரவியது. இந்த வழக்கு தொடர்பாக திருப்பூர் எஸ்.ஆர்.வி கார்டனைச் சேர்ந்த ஓட்டல் கணக்காளர் விஷ்ணு பாரதி, ஓட்டல் பவுன்சர்கள் ரெயின்போ ரமேஷ், பில்லா ரமேஷ், ரஞ்சித், சுதர்சன், முகமது அப்ரிதீன் ஆகியோர் மீது கொலை முயற்சி, வழிப்பறி, தாக்குதல் உட்பட 5 பிரிவின் கீழ் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த ரெயின்போ ரமேஷ் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டுள்ள ரமேஷ் பாஜகவில் இளைஞர் அணி செயலாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது . மேலும் அவர் ஹோட்டலில் பகுதி நேர பவுன்சராகவும் பணியாற்றி வந்தார்.

இதையும் படிக்க: ஹரியானாவில் மசூதியை அடித்து நொறுக்கி அட்டூழியம்.. தொழுது கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com