கவனக்குறைவாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நடிகர்! உயிரிழந்த பெண்! கர்நாடகாவில் சோக நிகழ்வு

கன்னட திரைப்படத்தின் நடிகர் நாகபூஷண் என்பவர் அலட்சியமாக காரை ஓட்டியதால் கணவன் மணைவி இருவருக்கும் பலத்த காயம் ஏற்படவே காயமடைந்த பெண் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
 நடிகர் நாகபூஷண் - கன்னட  நடிகர்
நடிகர் நாகபூஷண் - கன்னட நடிகர்முகநூல்

கன்னட திரைப்படத்தின் நடிகர் நாகபூஷண் என்பவர் அலட்சியமாக காரை ஓட்டியதால் கணவன் மனைவி இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த பெண் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 நடிகர் நாகபூஷண்
நடிகர் நாகபூஷண் முகநூல்

கன்னட திரைப்பட நடிகரும் குறிப்பாக அதிக நகைச்சுவை வேடங்களிலும் நடித்தவருமான நடிகர் நாகபூஷண் என்பவர் உத்தரஹள்ளியில் இருந்து கோணனகுண்டே கிராஸ் நோக்கி தனது காரை ஓட்டிச் சென்றுள்ளார். க்டந்த செப்டம்பர் 30ம் தேதி அன்று கிருஷ்ணா.பி (58) - பிரேமா.எஸ் (48) தம்பதி வசந்தபுர மெயின் ரோட்டில் உள்ள நடைப்பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து அலட்சியமாக கார் ஓட்டி வந்துள்ளார் நடிகர் நாகபூஷண். தீடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் அந்த தம்பதி மோதவே இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

இதன் பின்னர் அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி கார் நின்று விட்டது. பின்னர் அருகில் இருந்தவர்கள் காயமடைந்த இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவர் கணவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

 நடிகர் நாகபூஷணின் கார்
நடிகர் நாகபூஷணின் கார்முகநூல்

இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், “ நடிகர் நாகபூஷண் அலட்சியமாக காரை ஓட்டி இந்த விபத்தை நிகழ்த்தியுள்ளார். இது குறித்த வழக்கானது பதிவு செய்யப்பட்டு அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டு விசாரனையும் நடத்தப்பட்டு வருகின்றது” என்று தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் பற்றி மேலும் கிடைத்த தகவலின் படி, வேகம் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதற்காக நாகபூஷணா மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து நாகபூஷணா இன்னும் எந்த அதிகாரபூர்வ அறிக்கையையும்  வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com