\
திருநங்கைகள் கைது
திருநங்கைகள் கைதுpt desk

தஞ்சை|ரூ.50 ஆயிரம், 5 பவுன் நகை.. தொழிலதிபரிடம் யாசகம் கேட்பது போல் நடித்து 4 திருநங்கைகள் வழிப்பறி!

தஞ்சை அருகே காரில் வந்த தொழிலதிபரிடம் யாசகம் கேட்பது போல் நடித்து பணம் மற்றும் நகையை வழிப்பறி. செய்த நான்கு திருநங்கைகளை காவல் துறையினர் கைது செய்தனர்.
Published on

செய்தியாளர்: ந.காதர்உசேன்

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார். தோழிலதிபரான இவர், சொந்த வேலை காரணமாக புதுக்கோட்டை வந்த இவர், மீண்டும் சென்னை செல்வதற்காக தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது வளம்பக்குடி பகுதியில் இயற்கை உபாதைக்காக காரை நிறுத்தியுள்ளார்.

Police station
Police stationpt desk

இந்நிலையில், அந்த சாலையில் நின்றிருந்த திருநங்கை ஒருவர் தொழிலதிபரிடம் சாப்பிட பணம் கேட்டுள்ளார். இதையடுத்து தொழிலதிபர் நந்தகுமார் 300 ரூபாய் கொடுத்துள்ளார். அவரிடம் பணம் அதிகமாக இருப்பதை பார்த்த திருநங்கை, சத்தம் போட்டு மூன்று திருநங்கைகளை அழைத்துள்ளார். அங்கு வந்த அவர்கள் ஒன்றாக சேர்ந்து நந்தகுமாரிடம் இருந்து 50 ஆயிரம் பணம், கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலி ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி விட்டனர்.

திருநங்கைகள் கைது
தேனி|55 வயது பெண் உயிரிழப்பு.. எந்நேரமும் இடியும் நிலையில் தொகுப்பு வீடுகள்-அச்சத்தில் கிராம மக்கள்!

இது குறித்து தகவல் அறிந்த அங்கு வந்த ரோந்து போலீஸார் மற்றும் செங்கிப்பட்டி போலீஸார் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சுற்றிக் கொண்டிருந்த நான்கு திருநங்கைகளை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் நால்வரும் சேர்ந்து நந்தகுமாரிடம் பணம் நகையை பறித்தது தெரியவந்தது. இதையடுத்து சுபஸ்ரீ (25), ரஃபியா (29), மயூரி (28), தேவயானி (37) ஆகிய நான்கு திருநங்கைகளையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து பணம் மற்றும் நகையை பறிமுதல் செய்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com