புதுச்சேரி: காவல் நிலையத்திலேயே இரு தரப்பினர் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு

புதுச்சேரி: காவல் நிலையத்திலேயே இரு தரப்பினர் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு

புதுச்சேரி: காவல் நிலையத்திலேயே இரு தரப்பினர் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு
Published on

புதுச்சேரியில் மணக்குள விநாயகர் கோயில் அருகே கடை வைத்திருக்கும் இரு தரப்பினர், காவல் நிலையத்திற்குள்ளேயே தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோயில் அருகே கடை வைத்திருக்கும், கவுசல்யா மற்றும் வள்ளி ஆகியோரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், இரு தரப்பினரும் கோயில் அருகே மோதலில் ஈடுபட்டனர். அப்போது, அங்கிருந்த பொருட்களை சாலையில் கொட்டினர். இந்த தகராறில் காயமடைந்தவர்கள் ரத்தம் சொட்டச் சொட்ட பெரியக்கடை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது, இரு காவலர்கள் மட்டுமே பணியில் இருந்ததால், மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரும் காவல் நிலையத்திலும் ஒருவரை ஒருவர் கற்களைக் கொண்டு தாக்கிக் கொண்டனர். இதில் ஒருவரின் மண்டை உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி அனைவரையும் கலைத்தனர். இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் ஆறு பேர் காயமடைந்தனர். இந்த மோதலில், காவல் நிலையம் கலவரப்பகுதியாக மாறியது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com