தென்காசி: சிறுமியை திருமணம் செய்ய முயன்ற இளைஞர் - மீண்டும் போக்சோ சட்டத்தில் கைது

புளியங்குடியில் 15 வயது சிறுமியை திருமணம் செய்ய முயன்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Accused
Accusedpt desk

செய்தியாளர்: டேவிட்

தென்காசி மாவட்டம் புளியங்குடி சிந்தாமணி பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் சிவநாராயணன் (21). பிளஸ்-2 முடித்துள்ள இவர், புளியங்குடி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியிடம் திருமண ஆசைவார்த்தை கூறி அவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.

மேலும் சிறுமியின் பெற்றோரிடம் சிறுமியை திருமணம் செய்ய பெண் கேட்டுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், சிவநாராயணன் மீது புளியங்குடி போலீசில் புகார் அளித்தனர்.

Police station
Police stationpt desk

இந்நிலையில், வாசுதேவநல்லூர் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கண்மணி (பொறுப்பு) விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து இளைஞர் சிவநாராயணனை கைது செய்தார். பின்னர் அவரை சிவகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.

Accused
சென்னை: இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - உணவு டெலிவரி ஊழியர் கைது

இந்த சிவநாராயணன், ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டு வேறொரு போக்சோ சட்டத்தில் கைதான நிலையில், தற்போது மீண்டும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com