\
Accused
Accusedpt desk

தென்காசி: தொழிலதிபரை காரில் கடத்திச் சென்ற கும்பல் கைது - போலீசார் விசாரணை

தென்காசி அருகே தொழிலதிபரை காரில் கடத்திச் சென்ற கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published on

செய்தியாளர்: புருஷோத். V

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள குருசாமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார். இவர் கடையம் அருகே உள்ள வெங்கடாபட்டி என்ற கிராமத்தில் அரிசி ஆலை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த ஆண்டு கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சூர்யகுமார் என்பவரிடம் சுமார் 98 லட்சத்திற்கு நெல் கொள்முதல் செய்துள்ளார்.

உதயகுமார்
உதயகுமார்pt desk

ஆனால், கொள்முதல் செய்து ஒரு வருடம் ஆகியும் இதுவரை சுமார் 21 லட்சம் ரூபாயை திருப்பிக்கொடுக்காமல் இழுத்தடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சூரியகுமார் நேற்று பிற்பகல் கடையம் அருகே உள்ள வெங்கடாபட்டி என்ற கிராமத்தில் உள்ள அரிசி ஆலையில் வைத்து உதயகுமாரை கடத்திச் சென்றுள்ளனர். இதில் சூரியகுமார் தனக்கு உதவிபுரிய தனது நண்பர்களான சுரேஷ், ஹரி கிருஷ்ணன், பிரதீபன் ஆகிய மூவரையும் தனது சொந்த வாகனத்திலேயே அழைத்துச் சென்றுள்ளார்.

Accused
மூடப்படும் ஏடிஎம்கள்? வெளிவந்த அதிர்ச்சி தகவல்

இதுகுறித்து உதயகுமாரின் தந்தை அன்பழகன் கடையம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து உதயகுமாரை தேடிவந்தது. அதன்முடிவில், பெரம்பலூர் சுங்கச் சாவடிகள் வைத்து கடத்தப்பட்ட உதயகுமாரை பத்திரமாக மீட்டுள்ளனர். இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட சூரியகுமார், சுரேஷ், ஹரி கிருஷ்ணன், பிரதீபன் ஆகிய நால்வரையும் கைது செய்த போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்,

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com