பெண் உட்பட 4  பேர் கைது
பெண் உட்பட 4 பேர் கைதுpt desk

தென்காசி | விவசாயி கொலை வழக்கு - பெண் உட்பட 4 பேர் கைது

சங்கரன் கோவில் அருகே விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில், பெண் உட்பட நான்கு பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.
Published on

செய்தியாளர்: டேவிட்

சங்கரன்கோவில் அருகே உள்ள பெரியசாமிபுரத்தைச் சேர்ந்த ஆபிரகாம். என்பவர் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். கடந்த புதன்கிழமை இரவு ஆபிரகாம் அதே பகுதியில் உள்ள வேத கோயில் தெருவில் உள்ள விவசாய தோட்டத்தில் அறிவாளால் வெட்டப்பட்டு கிடந்துள்ளார்.

Arrested
Arrestedpt desk

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர், சடலத்தை மீட்டு நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், ஆப்ரஹாம் உடன் தொடர்பில் இருந்த ஐஸ்வர்யா மற்றும் கணவர் அய்யாதுரை, அவரது உறவினர்கள் தினேஷ், சிவசக்தி ஆகியோரிடம் மேற்கொண்ட

பெண் உட்பட 4  பேர் கைது
ஈரோடு | தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த மூத்த தம்பதியர் கொலை – போலீசார் விசாரணை

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதைத் தொடர்ந்து தினேஷ் (25), அவரது நண்பர் சிவசக்தி (25), அய்யாதுரை மற்றும் ஐஸ்வர்யா ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com