வேலூர்: பட்டப்பகலில் ஆட்சியர் அலுவலகத்தில் பைக் திருட்டு; போலீஸ் விசாரணை

வேலூர்: பட்டப்பகலில் ஆட்சியர் அலுவலகத்தில் பைக் திருட்டு; போலீஸ் விசாரணை
வேலூர்: பட்டப்பகலில் ஆட்சியர் அலுவலகத்தில் பைக் திருட்டு; போலீஸ் விசாரணை
பட்டப்பகலில் வேலூர் ஆட்சியர் அலுவகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசு தற்காலிக ஊழியரின் இருசக்கர வாகனம் திருடுபோனது. சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறை விசாரணை நடத்திவருகின்றனர். 
வேலூர் மாவட்டம் அணைகட்டு அடுத்த நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோபி(29). இவர் சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் ஆதார் பிரிவில் தற்காலிக ஊழியராக (தொகுப்பூதியம்) பணியாற்றி வருகிறார். இவர் தினம் தனது இருசக்கர வாகனத்தில் பணிக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்படி இவர் வரும்  வண்டியை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தபால் நிலையத்துக்கு அருகில் நிறுத்திவிட்டு அலுவலகம் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அந்த வகையில் இன்று காலை 10.00 மணிக்கு பணிக்கு வந்தவர் வழக்கம்போல் தனது இருசக்கர வாகனத்தை தபால் நிலையம் அருகில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.
மதியம் உணவு இடைவேளையின் போது வந்து வண்டியை பார்த்தபோது அங்கு தனது இருசக்கர வாகனம் இல்லாதை கண்டு அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கம் தேடியுள்ளார். இருந்தும் வண்டி கிடைக்காததால் ஆட்சியர் அலுவகத்தில் உள்ள சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தபோது முகக்கவசம் அணிந்து டிப் டாப்பாக வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மதியம் சுமார் 12.30 மணி அளவில் கோபியின் இருசக்கர வாகனத்தை எடுத்துச்செல்வது பதிவாகி இருந்தது. இதனையடுத்து கோபி அளித்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை வைத்து சத்துவாச்சாரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இருசக்கர வாகனத்தை திருடிச்சென்றவரை தேடி வருகின்றனர். 
பட்டப்பகலில் ஆட்சியர் அலுவலகத்திற்குள்ளே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தற்காலிக அரசு ஊழியரின் இருசக்கர வாகனம் திருடு போயிருப்பது பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com