தஞ்சாவூர்: கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த தங்கசங்கிலியை திருடி சென்ற மர்ம நபர்!

பாபநாசம் அருகே உச்சிமாகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கிருக்கும் அம்மன் கழுத்திலிருந்த தங்க நகையை மர்ம நபர் ஒருவர் திருடி சென்று இருக்கிறார். சிசிடிவி உதவியின் மூலம் அந்த மர்மநபரை தேடி வருகிறார்கள்
காளியம்மன் கோவில்
காளியம்மன் கோவில் PT

தஞ்சாவூர் மாவட்டத்தில் கோயில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.

பாபநாசம் அருகே உச்சிமாகாளியம்மன் கோயிலில் காலையில் தரிசனம் செய்ய பக்தர்கள் வந்தபோது வாயிற்கதவின் பூட்டு
உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கிராமத் தலைவர் பாண்டியனுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வந்த
பிறகு உள்ளே சென்று பார்த்தபோது, அம்மன் கழுத்தில் இருந்த இரண்டேகால் சவரன் தங்கச்சங்கிலி காணாமல்
போனது தெரியவந்தது.

இதையடுத்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தடயவியல் நிபுணர்களுடன் வந்து சோதனை மேற்கொண்டனர். கோயிலில் இருந்த கண்காணிப்புக் கேமரா காட்சிப் பதிவுகளை வைத்து காவலர்கள்
விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com