தெலங்கானா: ஆட்டை திருடியதாக பட்டியலின இளைஞரை தலைகீழாக தொங்கவிட்டு அடித்த கொடூரம்!

ஆட்டை திருடியதாகக் கூறி பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞரை தலைகீழாக தொங்கவிட்டு அடியில் புகை மூட்டம் போட்டு அடித்து துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
punishment
punishmentpt desk

தெலங்கானா மாநிலம், மஞ்சிரியாலா மாவட்டம், மந்தமரியைச் சேர்ந்தவர் கொமுராஜுலா ராமுலு. இவருக்குச் சொந்தமான ஆட்டு மந்தையிலிருந்து ஒரு ஆடு காணாமல் போயுள்ளது. இதையடுத்து அந்த பகுதியியில் மாடு மேய்த்துக் கொண்டுருந்த தேஜா மற்றும் பட்டியலினத்தைச் சேர்ந்த அவரது நண்பர் சிலுமுலா கிரண் மீது சந்தேகமடைந்த கொமுராஜுலா ராமுலு, அவர்கள் இருவரையும் மாட்டு தொழுவத்திற்கு அழைத்து வந்துள்ளார்.

punishment
punishmentpt desk

அங்கு இருவரையும் தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு அடியில் தீவைத்து புகைமூட்டம் போட்டதோடு, இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து அதை சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து இந்த வீடியோ வைரலான நிலையில், இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com