\
மாணவிகளிடம் சில்மிஷம்: ஆசிரியர் பள்ளிக்குள் சிறைவைப்பு

மாணவிகளிடம் சில்மிஷம்: ஆசிரியர் பள்ளிக்குள் சிறைவைப்பு

மாணவிகளிடம் சில்மிஷம்: ஆசிரியர் பள்ளிக்குள் சிறைவைப்பு
Published on

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கி சிறைவைத்தனர்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கம்பிக்கொல்லை பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன். சோலூர் பகுதியில் இயங்கிவரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஆசிரியர் ஞானசேகரன் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, சில்மிஷத்தில் ஈடுபடுவதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து, தலைமையாசிரியர் ஞானசேகரனை சரமாரியாக தாக்கி பள்ளி வகுப்பறைக்குள் சிறைவைத்தனர்.

பள்ளியில் உள்ள பொருட்களும் சேதமடைந்தன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் போலீசார், சிறைவைக்கப்பட்ட தலைமை ஆசிரியரை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com