ராஜபாளையம்: வாட்சப்பில் மாணவிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது
ராஜபாளையம் அருகே பள்ளி மாணவிக்கு வாட்சப்பில் ஆபாச தகவல்களை பகிர்ந்ததாக, அதே பள்ளியில் பணியாற்றும் வேதியியல் ஆசிரியர் தங்கராஜ் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள புனல்வேலி, தங்க விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர் சோழபுரத்தில் இயங்கும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளியில் தற்காலிக வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தன்னிடம் 12ஆம் வகுப்பில் பயிலும் மாணவிக்கு, வாட்சப்பில் ஆபாசமான தகவல்களை அனுப்பி தொடர்ந்து தொந்தரவு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனது பெற்றோரிடம் மாணவி கூறியதை அடுத்து, பெற்றோர் பள்ளி தலைமையாசிரியரிடம் புகார் அளித்தனர்.
தலைமையாசிரியர் பாரதி நகரைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில், அனைத்து மகளிர் காவல்துறையினர் தங்கராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.